அடுத்தடுத்து உயிரிழந்த குழந்தைகள் - மீண்டும் பரவும் கொடூர வைரஸ் - பெற்றோர்களே உஷார்
அடுத்தடுத்து உயிரிழந்த குழந்தைகள் - மீண்டும் பரவும் கொடூர வைரஸ் - பெற்றோர்களே உஷார்
குழந்தைகளை தாக்கும் சாண்டிபுரா வைரஸ் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் பரவிவருகிறது. குழந்தைகளை தாக்கும் சாண்டிபுரா வைரஸால் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் பரவி வருகிறது. ராப்டோவிரிடே குடும்பத்தை சேர்ந்த ஆர்.என்.ஏ. வைரசான சாண்டிபுரா வைரஸ் பாதிப்புடைய பூச்சிகளின் உமிழ்நீர் வழியாக பரவுகிறது.
பூச்சிகள் மனிதரையோ, விலங்குகளையோ கடிக்கும் போது வைரஸ் தொற்றுகிறது. திடீரென காய்ச்சல், தலைவலி வாந்தி, வயிற்றுப்போக்கு வைரஸ் தொற்று அறிகுறியாக இருக்கிறது. அது பல்கி பெருகும் போது மூளையில் திசுக்கள் வீக்கத்திற்கு வழிவகை செய்கிறது. பெரும்பாலும் 9 மாதம் முதல் 14 வயதுடைய குழந்தைகளையே இந்த வைரஸ் தாக்குகிறது. வைரஸ் முதல் முறையாக 1965 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
2003-04 ஆம் ஆண்டுகளில் மத்திய இந்தியாவில், மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திராவில் இந்த வைரஸ் தொற்றால் 300-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்து இருந்தனர். இப்போது குஜராத்தில் வைரஸ் பரவும் வேளையில் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 16 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராதில் கிராம புறங்களில் வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரமாக்க உத்தரவிட்டிருக்கும் அரசு, அறிகுறி கொண்டவர்கள் ரத்த மாதிரிகளை புனே ஆய்வு மையத்திற்கு அனுப்ப மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.