உத்தரகண்டில் அடுத்த அதிர்ச்சி...செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை - 9 நாட்களாக அழுகி கிடந்த சடலம்
உத்தரகண்டில், பெண் செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச எல்லையில் அமைந்துள்ள பிலாஸ்பூர் பகுதியில், வாடகை வீட்டில் தனது 11 வயது மகளுடன் வசித்து வந்த செவிலியர், கடந்த ஜூலை 30ம் தேதி மாலை, பணி முடித்து வீடு திரும்பும்போது மாயமானார். இதுகுறித்து அவரது சகோதரி அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அவரது வீட்டின் அருகே, 9 நாட்களுக்குப்பின் செவிலியர் சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக தினக்கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். செவிலியரிடம் இருந்து செல்போன் மற்றும் 3 ஆயிரம் ரூபாயை திருடியதும் தெரியவந்தது.