கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பெருங்கல் குத்து அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது, இதனால் 5 ஷட்டர் வழியாக தண்ணீர் திறக்கப்படுவதால் சாலக்குடி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அதிரப்பள்ளி அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்றுடன் மழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகள் சேதமடைந்துள்ளது. தாணிகுடம் கோவிலை சுற்றியும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.