கல்வி உதவித்தொகை, இலவச வீடு வழங்கும் மலபார் குழுமம்

Update: 2024-10-07 11:42 GMT

நாடு முழுவதும் 21 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகளுக்கு 16 கோடி ரூபாய் மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்குவதாக மலபார் குழுமம் அறிவித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மலபார் குழும தலைவர் எம்.பி. அகமது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் 80 நகரங்களில் பசியில் வாடும் 50,000 பேருக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு பாக்கெட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு ஆதரவற்ற பெண்களுக்கு வீடுகள் வழங்கப்படும் எனவும் மலபார் குழுமம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்