இங்கிலாந்து நாட்டில் கிடைத்த செவிலியர் வேலை - ஏர்போர்ட்டில் திடீரென சுருண்டு விழுந்து -பறிபோன உயிர்

Update: 2024-05-19 15:54 GMT

கேரள மாநிலம் ஹரிபாட் பகுதியை சேர்ந்தவர் சூர்யா. செவிலியரான இவருக்கு இங்கிலாந்து நாட்டில் செவிலியர் பணி கிடைத்துள்ளது. மகிழ்ச்சியில் உறவினர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்து விட்டு, கொச்சி விமான நிலையம் வந்தடைந்த சூர்யா, திடீரென விமான நிலையத்தில் மயங்கி விழுந்ததும், பின்னர் உடல் நலம் குன்றி உயிரிழந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் , அதிர்ச்சியளிக்கும் வகையில் உடற்கூராய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. வேலைக்காக வெளிநாடு செல்வதாக கூறி உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கச் சென்ற சூர்யா, வரும் வழியில் உற்சாக மிகுதியில் அரளி பூ ஒன்றை தெரியாமல் சாப்பிட்டதாகவும், இதனால் அவர் இருதய பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சூர்யாவின் வீட்டருகே இருந்த அரளி பூ மற்றும் இலைகளை கைப்பற்றி ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்திருக்கும் போலீசார், அதன் முடிவு கிடைத்த பின்னரே இறுதி அறிக்கை சமர்பிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்