போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நைஜீரியாவை சேர்ந்த பிராங் விட்டாஸ்-க்கு ஜாமீன் நிபந்தனையாக அவரது இருப்பிடம் குறித்து தகவல் தெரிவிக்க கூகுள் பின் லோக்கேஷனை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கு எதிராக அவர் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. குற்றம்சாட்டபட்ட நபர் செல்லும் இடங்களை அறிந்துகொள்ளும் வகையில் கூகுள் மேப் இடத்தை விசாரணை அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும் என நிபந்தனையை ஜாமீன் வழங்க விதிக்கக்கூடாது என உத்தரவிட்டது. இதுபோன்ற ஜாமீன் நிபந்தனை குற்றம்சாட்டப்பட்ட நபரின் அந்தரங்க உரிமைய பறிப்பதாகும் எனவும் தெரிவித்துள்ளது.