அடுத்த 6 மணி நேரத்தில் புயல்... வானிலை மையம் எச்சரிக்கை..!

Update: 2023-10-23 14:12 GMT

வங்கக்கடலில் அடுத்த 6 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது...மத்திய மேற்கு வங்க கடலில் மையம் கொண்டு உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது... இது ஒடிசாவின் பரதீப்பில் இருந்து தெற்கில் சுமார் 430 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் திகாவில் இருந்து தெற்கு-தென்மேற்கில் 590 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் வங்க தேசம் கேபுபாராவில் இருந்து தென்-தென்மேற்கில் 740 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது... இது அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது... பின்பு சற்று வலு குறைந்து அக்டோபர் 25ம் தேதி மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கதேசத்தின் கேபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது

Tags:    

மேலும் செய்திகள்