இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சோதனையில், 65 கிலோ ஹெராயின் போதைப்பொருள் சிக்கியது.
இலங்கையின் தெற்கு கடல் பகுதியில், கடற்படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையை மேற்கொண்டனர். அப்போது 2 படகுகளில், சுமார் 162 கோடி மதிப்புள்ள, 65 கிலோ ஹெராயின் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அவை பறிமுதல் செய்யப்பட்டு, 11 பேர் கைது செய்யப்பட்டனர்.