பதவிக்கு வேட்டு ... அடுத்த கர்நாடக CM யார்..? சித்தராமையாவை முடக்கும் மூடா..!

Update: 2024-09-25 16:57 GMT

மைசூர் நகர மேம்பாட்டு ஆணையம் கேசாரே கிராமத்தில் சித்தராமையா மனைவி பார்வதிக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்தியது. அதற்கு மாற்றாக விஜயநகராவில் 14 கிரவுண்ட் நிலம் வழங்கப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் மதிப்பைவிட பல மடங்கு அதிகம் மதிப்புள்ள நிலம் சித்தராமையா மனைவிக்கு வழங்கப்பட்டது எனவும், சித்தராமையா அதிகாரத்தைதவறாக பயன்படுத்தியிருக்கிறார் எனவும் ஆளுநரிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. புகார்கள் குறித்து விசாரித்த ஆளுநர், சித்தராமையாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதி வழங்கினார். இதற்கு எதிராக சித்தராமையா தொடர்ந்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து. இதனையடுத்து சித்தராமய்யா மீது வழக்கு பதிவு செய்ய மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றம் உத்தரவிட்டது. மூடா வழக்கில் புகார் பதிவு செய்ய மைசூர் லோக் ஆயுக்தா எஸ்.பி.க்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களில், டிசம்பர் 24 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்