பள்ளி பாடத்தில் தமன்னா வரலாறு..! கொதித்தெழுந்த பெற்றோர்...கர்நாடகாவில் வெடித்த சர்ச்சை

Update: 2024-06-27 12:21 GMT

கர்நாடகாவில், பள்ளிப்பாடத்தில், பிரபல நடிகை தமன்னா குறித்த பாடம் இடம்பெற்றுள்ளதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெங்களூரு ஹெப்பாலில் உள்ள தனியார் பள்ளி ஒன்று, ஏழாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் நடிகை தமன்னா குறித்த பாடத்தை இடம்பெறச் செய்துள்ளது. இதை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பிய பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை கோரி, கர்நாடகாவில் உள்ள ஆங்கில வழிப் பள்ளிகளின் அசோசியேட்டட் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இப்பிரச்னை தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், இதுகுறித்து முதன்மைக் கல்வித் துறையிடம் புகார் செய்வதாகவும், தனியார் பள்ளிகள் சங்கச் செயலர் சசிகுமார் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்