நீதிமன்ற உத்தரவுப்படி அரசு அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை.. - புதுச்சேரியில் பரபரப்பு...

Update: 2024-09-09 17:26 GMT

புதுச்சேரியை சேர்ந்த விஜயலட்சுமி என்ற அரசு பெண் ஊழியர், 2012-ஆம் ஆண்டில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என, தனியார் நிதி நிறுவனம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. விஜயலட்சுமி 2018-ஆம் ஆண்டு பணிஓய்வு பெற்ற நிலையில், அவரது ஓய்வூதிய பணத்தை நிறுத்தி வைக்குமாறு, மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் உத்தரவை மீறி விஜயலட்சுமிக்கு சேர வேண்டிய அனைத்து தொகைகளையும் மேம்பாட்டு கழகம் செலுத்தியுள்ளது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்திற்கு சென்ற ஊழியர்கள், விஜயலட்சுமி கடனாக வாங்கிய 13 லட்சம் ரூபாய் மற்றும் அங்குள்ள நாற்காலி, கணினி, மேஜை உள்ளிட்ட பொருட்களை ஐப்தி செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்