சீறிப்பாய்ந்த PSLV சி-56 ராக்கெட்... ஏவப்பட்ட 23 நிமிடத்தில்..இஸ்ரோ பரபரப்பு தகவல்

Update: 2023-07-30 04:52 GMT

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் மூலம் 7 செயற்கைக்கோள்களும் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ ​தெரிவித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட், இன்று காலை 6.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. சிங்கப்பூர் நாட்டின் 7 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

சிங்கப்பூர் இன்ஜினியரிங் நிறுவனத்தை சேர்ந்த செயற்கைக்கோளும், என்.டி.யு சிங்கப்பூர் உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 6 நானோ செயற்கைக்கோள்களும், புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். ராக்கெட் ஏவப்பட்டதை, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்தவாறு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்தனர். சிங்கப்பூர் என்.டி.யு பல்கலைக்கழகம் சார்பில் அனுப்பப்பட்ட ஏர்காப்ஸ், வேலாக்ஸ் - ஏ. எம், ஸ்கூப் - 2 ஆகிய 3 செயற்கைக்கோள்களை, அரியலூர் ஐயப்பன் நாயக்கன்பட்டியை சேர்ந்த சண்முகசுந்தரம் செல்லதுரை வடிவமைத்துள்ளார். இவர் சென்னை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டமும், செயற்கைக்கோள்களின் வெப்ப நிலையை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இவர் சிங்கப்பூர் என்.டி.யு. பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்