ராணுவ ஹெலிகாப்டரில் தமிழகத்திற்கு கம்பீரமாக வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

Update: 2023-08-05 11:17 GMT

மைசூரில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி ஹெலிகாப்டர் தளத்திற்க்கு வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி மூர்மு.

மசினகுடியில் இருந்து சாலை மார்க்கமாக வனப்பகுதி வழியாக 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமிற்கு செல்கிறார்.

யானை முகாமில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

அங்கு சமீபத்தில் ஆஸ்கார் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்தில் தோன்றிய யானைகளிலும், அந்த யானைகளை பராமரித்த பொம்மன், பெள்ளி தம்பதிகளை சந்திக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து வளர்ப்பு யானை முகாம் மற்றும் யானைக்கு உணவளிப்பதை பார்வையிடுகிறார்.

மேலும் முதுமலை தெப்பகாடு மற்றும் டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் உள்ள பாகங்கள் சிலரை சந்திக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்