டெல்லி விக்ஞான் பவனில் நடைபெற உள்ள மத்திய பட்ஜெட் 2024-25-க்கு பிந்தைய மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்ற உள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு, வளர்ச்சியை நோக்கிய அரசின் பரந்த தொலைநோக்குப் பார்வை குறித்தும், அதற்கான முயற்சியில், தொழில்துறையின் பங்களிப்புக் குறித்தும் விவாதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்துறை, அரசு, தூதரக அதிகாரிகள், சிந்தனையாளர்கள் உள்ளிட்ட 1000-க்கும் அதிகமானோர் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.