ஆன்லைன் சூதாட்டத்தில், 2 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த பிளஸ் டூ மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் நரசம்பேட்டை பகுதியை சேர்ந்த பிளஸ் டூ படிக்கும் மாணவன், தந்தையின் கிரெடிட் கார்டை வைத்து செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடியுள்ளார். இதில் சுமார் 2 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததாக கூறப்படும் நிலையில், செய்வதறியாது திகைத்த பள்ளி மாணவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.