ஞானவாபி மசூதியில் அகழ்வாய்வு செய்வதற்கு எதிரான மனு...அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி

Update: 2023-08-03 17:25 GMT

ஞானவாபி மசூதியில் அகழ்வாய்வை தொடர்ந்து நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

வாரணாசி நீதிமன்றம் வழங்கிய அனுமதிக்கு எதிராக மசூதி கமிட்டி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் விசாரித்த‌து. இந்நிலையில், நீதிபதி ஜெய்ந்த் பானர்ஜி இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், நீதியின் நலன் கருதி, ஞானபாபி மசூதியில் அறிவியல் பூர்வமான அகழ்வாய்வு நடத்த வேண்டிய அவசியம் என்றார். இதனால், ஞானவாபி மசூதியில் தொல்லியல்துறையினர் அகழாய்வு நடத்த அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, மசூதி கமிட்டி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெய்ந்த் பானர்ஜி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்