"ஒரு கிலோ ரூ.4 தான்.." - ஆத்திரத்தில் தக்காளியை சாலையில் கொட்டிய விவசாயி

Update: 2023-09-08 02:45 GMT

ஆந்திர மாநிலம் கர்னூலில், தக்காளி விலை கிலோ 4 ரூபாய்க்கு சரிந்ததையடுத்து, விவசாயி ஒருவர் ஆத்திரமடைந்து தக்காளிகளை சாலையில் கொட்டி அழித்தார். பாடிகொண்டா வேளாண் சந்தையில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. கூலி மற்றும் போக்குவரத்து செலவும் கட்டுப்படியாகவில்லை என அருகில் உள்ள சாலையிலேயே தக்காளிகளை கொட்டி விட்டு சென்றுள்ளார். கடந்த மாதம் தக்காளி விலை விண்ணை தொட்ட நிலையில் தற்போது விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தக்காளிகள் சாலையில் கொட்டி கிடப்பதை மக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்