அதிகரித்த சமையல் எண்ணெய் விலை - மத்திய அரசு எடுத்த முயற்சி

Update: 2024-09-18 07:03 GMT

சமையல் எண்ணெய் விலையை உயர்த்த வேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்க்கான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு கடந்த வாரம் உயர்த்தியதால், சில்லறை விற்பனையில் எண்ணெய் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடன் மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, குறைந்த வரியில் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் வகைகள் 45 முதல் 50 நாட்கள் வரை இருக்கும் என்பதால், சில்லறை விலை உயர்வை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்