"இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் உதவ‌வில்லை" - ரணில் விக்கிரமசிங்கே வேதனை

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு, இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் உதவி செய்ய தயாராக இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வேதனை தெரிவித்துள்ளார்....

Update: 2022-06-09 08:10 GMT

"இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் உதவ‌வில்லை" - ரணில் விக்கிரமசிங்கே வேதனை

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு, இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் உதவி செய்ய தயாராக இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில், இலங்கையில் எரிபொருள், நிலக்கரிக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், எந்தவொரு நாடும் இதற்காக பணம் வழங்கவில்லை என வேதனை தெரிவித்தார். இந்தியா மட்டுமே இலங்கைக்கு எரிபொருள், நிலக்கரி ஆகியவற்றை வழங்கி வருவதாக தெரிவித்த ரணில், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார். மேலும், இலங்கைக்கு உதவி செய்ய இந்தியாவில் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், எதிர்ப்பை மீறி இலங்கைக்கு இந்தியா உதவி வருவதாகவும் ரணில் விக்கிரமசிங்கே குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்