ஒரே நொடியில் தரைமட்டமாகிய பிரமாண்டம் - கொதித்தெழுந்து நாகார்ஜுனா சொன்ன வார்த்தை

Update: 2024-08-24 14:47 GMT

ஐதராபாத்தில் தனக்கு சொந்தமான அரசங்கம் சட்டவிரோதமான முறையில் இடிக்கப்பட்டுள்ளதாக நடிகர் நாகார்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்திருக்கும் செய்தியில் அரங்கம் இடிக்கப்பட்டதால் வேதனை அடைந்திருப்பதாகவும், நிலம் பட்டா நிலம் என்றும் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். காலை கட்டிடம் இடிக்கப்படுவதற்கு முன்பாக எந்த அறிவிப்பும் தெரிவிக்கவில்லை என கூறியிருக்கும் நாகார்ஜுனா, கட்டிடம் இடிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தால், நானே அதை செய்திருப்பேன், சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வேன் எனவும் கூறியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்