10 ம் வகுப்பு படித்த சிறுமி தலையை துண்டாக வெட்டி வீசிய வெறியன் - கதிகலங்க வைத்த கல்யாண சைக்கோ
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் சூர்லப்பியில் பத்தாம் வகுப்பு படித்த வந்த சிறுமி தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார். இந்த நிலையில் சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த 32 வயதான
பிரகாஷூக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். நிச்சயதார்த்தம் நடைபெற்றபோது, இது குறித்த தகவலை கேள்விப்பட்ட மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் பெற்றோர்களிடம் 18 வயது பூர்த்தியான பின்னர் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறி சென்றுள்ளனர். இதனையடுத்து பெற்றோர்கள் திருமணத்தை நிறுத்திவைத்துள்ளனர்.