முகேஷ் அம்பானி இல்ல திருமண விழா.. முதல் முதலில் மகனுடன் பங்கேற்ற பிரபல இயக்குநர்
முகேஷ் அம்பானி இல்ல திருமண விழாவில், இயக்குநர் அட்லி, தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பங்கேற்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்டின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் இன்று முதல் தொடங்கியது. இந்நிலையில், பெரும் கோடீஸ்வரர்கள், டாப் சினிமா பிரபலங்கள் என குறிப்பிட்டோருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்ட விழாவில், முதன்முறையாக குழந்தையுடன் அட்லி பங்கேற்ற வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.