மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 9 சிறுமிகள் உட்பட 28 சிறுவர்களுக்கு..கேரளாவில் நடந்தது என்ன?

Update: 2024-07-10 04:10 GMT

மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 9 சிறுமிகள் உட்பட 28 சிறுவர்களுக்கு..கேரளாவில் நடந்தது என்ன? - ஷாக் தகவல்

மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 28 சிறார்களை, தனியார் காப்பகம் ஒன்று, உரிய அனுமதியின்றி கேரளா அழைத்து வந்துள்ளது.பத்தணம் திட்டா மாவட்டம், திருவல்லா பகுதியில் உள்ள காப்பகத்தில், மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 9 சிறுமிகள் உள்ளிட்ட 28 சிறார்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, அரசிடம் எந்த அனுமதியும் பெறப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கேரள மாநில குழந்தைகள் ஆணையம் சார்பில், காப்பகத்திற்குள் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில், குற்றச்சாட்டு உறுதியானதை தொடர்ந்து, மணிப்பூர் சிறார்கள் அனைவரும் அரசு காப்பகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதேபோன்று, மேலும் எத்தனை சிறார்கள் அழைத்து வரப்பட்டனர்? அரசு அனுமதியின்றி செயல்பட்டதன் காரணம் என்ன? என்பது குறித்து, தனியார் காப்பக நிர்வாகிகளிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்