மம்தாவுக்கு அதிர்ச்சி தந்த ED..! அமைச்சர் அதிரடி கைது | Mamata Banerjee

Update: 2023-10-27 09:31 GMT

ஊழல் குற்றச்சாட்டில், மேற்குவங்க அமைச்சர் ஜோதிபிரியா மாலிக்கை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

மேற்குவங்க திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவரான

ஜோதிபிரியா மாலிக், உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது பொது விநியோகத் திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கொல்கத்தா புறநகர் பகுதியில் உள்ள சால்ட்லேக்கில் உள்ள இல்லத்தில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து, ஜோதிபிரியா மாலிக்கை மத்திய ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். சதித்திட்டம் செய்து தன்னை சிக்க வைத்துள்ளதாக ஜோதிபிரியா மாலிக் குற்றம் சாட்டினார். கைது செய்யப்பட்டுள்ள ஜோதிபிரியா தற்போது வனத்துறை அமைச்சராக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்