ஒட்டுமொத்த சாலையையும் மிரளவிட்ட தனி ஒருவன்..!

Update: 2024-08-21 05:35 GMT

மகாராஷ்டிரா மாநிலம், ஷேவ்கான் நகர நிர்வாகத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சேற்றில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ஷேவ்கான் நகரத்தில், அண்மையில் பெய்த மழையால், சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இந்நிலையில், சாலைகளை சீரமைக்காத ஷேவ்கான் நகர நிர்வாகத்தை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சஞ்செய் நாங்ரே என்பவர், சாலையில் தேங்கியுள்ள சகதி குட்டையில் அமர்ந்து, சேற்று நீரில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்