"ராகுல்... காந்தி குடும்பமா ? அவருக்கு DNA டெஸ்ட் எடுக்கணும்.." எம்எல்ஏ-வின் சர்ச்சை பேச்சு... நீதிமன்றம் அதிரடி உத்தரவு
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை பற்றி அவதூறாக பேசியதாக கேரள எம்.எல்.ஏ. அன்வர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலக்காடு தொகுதியில் போட்டியிடும் இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளர் விஜயராகவனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நீலம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அன்வர், காந்தி என்ற குடும்ப பெயருடன் அழைக்க தகுதியற்ற 4-ம் தர குடிமகனாக மாறிய ராகுல் காந்தியின், டி.என்.ஏ.வை ஆய்வு செய்ய வேண்டும் என்று பேசினார்.
அவரது இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அன்வர் மீது தேர்தல் ஆணையத்தில் கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் ஹாசன் புகாரளித்தார்.