கவனக்குறைவு.. மூலாதாரமே காலி.. விரக்தியில் தமிழகம் ஓடிவந்த கேரள புது மாப்பிள்ளை

Update: 2024-09-11 08:25 GMT

பணத்தை தொலைத்துவிட்ட விரக்தியில் கேரளாவை சேர்ந்த புது மாப்பிள்ளை தமிழகம் ஓடிவந்து விட்டார். மலப்புரம் பகுதியை சேர்ந்த பட்டதாரி விஷ்ணு. இவரும் கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டாரும் சேர்ந்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்து பத்திரிக்கையும் அடித்து விட்டனர். திருமணத்திற்காக ஒரு இடத்தில் கடன் வாங்கிய விஷ்ணு வரும் வழியில் அதனை தொலைத்துவிட்டார். இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டுக்கு செல்லாமல் பாலக்காடு, கோவை, நீலகிரி என சுற்றியுள்ளார். மகனை காணவில்லை என விஷ்ணுவின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விஷ்ணு தானே தனது காதலிக்கு போன் செய்து தான் ஊட்டியில் இருப்பதை தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஊட்டி வந்த மலப்புரம் காவல்துறையினர் விஷ்ணுவை அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்