கேரளாவை பரபரப்பாக்கிய வழக்கு.. முக்கிய குற்றவாளியை பிடிக்க விசாரணைக்குழு எடுத்த முடிவு
உடலுறுப்புகளுக்காக கேரளாவில் இருந்து ஈரானுக்கு ஆட்கள் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து சிறுநீரகம், கல்லீரல் உள்பட உடல் உறுப்புகளுக்காக ஈரான் நாட்டுக்கு ஆட்கள் கடத்தப்பட்டது தொடர்பாக திருச்சூரைச் சேர்ந்த சபித் நாசர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கொச்சியை சேர்ந்த மது, ஈரானில் உள்ளார். இந்நிலையில், அவருக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்க விசாரணைக் குழு இன்டர்போலின் உதவியை நாடியுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பும் இந்த வழக்கு குறித்து தகவல் சேகரிக்கத் தொடங்கியுள்ளதால், முக்கிய குற்றவாளியை இந்தியா அழைத்து வரும் பணிகள் விரைவாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.