கேரள நடிகை பாலியல் பலாத்கார புகார் அளித்த நிலையில், கேரள காங்கிரஸ் வழக்கறிஞர்கள் பிரிவு மாநிலத்தலைவர் பதவியை வி.எஸ்.சந்திரசேகரன் ராஜினாமா செய்துள்ளார். நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உட்பட 7 பேர் மீது புகார் அளித்த அதே நடிகை தான், வி.எஸ்.சந்திரசேகரன் மீதும் புகார் அளித்திருந்தார். இதன்பேரில் கொச்சி மத்திய காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, காங்கிரஸ் வழக்கறிஞர்கள் பிரிவு மாநிலத் தலைவர் பதவியை வி.எஸ்.சந்திரசேகரன் ராஜினாமா செய்துள்ளார்.