கேரளாவில், அரசின் புதிய மதுபான கொள்கையை உருவாக்குவது தொடர்பாக பார் உரிமையாளர்களிடம் லஞ்சம் கேட்டதாக ஆளுங்கட்சிக்கு எதிராக புகார் எழுந்தது. இந்நிலையில், தனியார் பார் உரிமையாளர்களுக்கு ஆதரவாக ஆளுங்கட்சியினர் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர், திருவனந்தபுரத்தில் சட்டசபையை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கானோர் ஆவேசமாக முழங்கியவாறு சென்றபோது போலீசார் தடுப்பு வேலி அமைத்து தடுத்தனர். அதை மீறி செல்ல முயன்றவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து அப்புறப்படுத்த முயன்றனர். இதையடுத்து, ஒரு மணி நேரத்திற்குப்பின் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.