மலப்புரத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த வாரம் துபாயில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பினார். இந்நிலையில், காய்ச்சல் மற்றும் அம்மை நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்நபரின் உமிழ்நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதில், அந்நபருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் கேரளாவில் முதன்முறையாக குரங்கம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது. இந்திய அளவில் இது இரண்டாவது பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உஷார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது