கருப்புக்கொடி காட்டிய மாணவர்கள்...உடனடியாக ஆளுநர் செய்த செயல்...கேரளாவில் பரபரப்பு
கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், கேரள அரசுக்கும் இடையே, கடந்த பல மாதங்களாக மோதல் வலுத்து வருகிறது. இதனிடையே, ஆளுங்கட்சி ஆதரவு மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ மாணவர்கள், ஆளுநர் ஆரிப் முகமது கான் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கொல்லம் மாவட்டத்திற்கு உட்பட்ட நிலமையில் என்ற இடத்திற்கு ஆளுநர் சென்றபோது, அங்கு எஸ்.எஃப்.ஐ மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.