கேரள மாநிலம் பாலக்காடு சாலச்சேரியிலுள்ள முலாயம் பரம்பத்து கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் எழுந்தருளல் நிகழ்ச்சியின் போது யானை திடீரென மிரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது... உடனடியாக பாகன்கள் யானையை அடக்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விழா திடலில் இருந்து யானை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், யானை மிரண்ட போது பக்தர்கள் அலறியடித்து ஓடினர்...