மார்க்சிஸ்ட் தலைவரான தந்தையின் உடலை கேட்டு போராடும் பாஜக நிர்வாகியான மகள் - அதிரடி காட்டிய கோர்ட்

Update: 2024-09-24 10:31 GMT

மார்க்சிஸ்ட் தலைவரான தந்தையின் உடலை கேட்டு போராடும் பாஜக நிர்வாகியான மகள் - யாரும் எதிர்பாரா உத்தரவை போட்ட கோர்ட்

கேரளாவில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவரது உடல் மருத்துவமனைக்கு தானம் செய்ய மகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், பிரச்சினை தீரும் வரை பிணவறையில் சடலத்தை வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சி.ஐ.டி.யு முன்னாள் மாநில தலைவருமான எம்.எம்.லாரன்ஸ் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார். அவரது விருப்ப‌ப்படி, உடலை அரசு மருத்துவமனைக்கு வழங்க, மகன் சஜீவ் நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால், தந்தை அவ்வாறு கூறவில்லை என்று, லாரன்சின் மகளும் பாஜக நிர்வாகியுமான ஆஷா எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தங்களது மத சடங்குகள் செய்து அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம், மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளரின் முடிவுக்கு உட்பட்டும், லாரன்சின் மகள், மகன் ஆகியோரின் ஒருமித்த கருத்துக்கு பின் உடலை ஒப்படைக்கலாம் என்றும், அதுவரை பிணவறையில் சடலத்தை பாதுகாக்கவும் உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்