உலக அளவில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலம் கொல்லம்பலத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில், AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஆசிரியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆசிரியைக்கு ஐரிஸ் எனப் பெயரிட்டுள்ளது. பெண் போன்று சேலை அணிந்து, அணிகலன்கள் அணிந்துள்ள இந்த AI டீச்சர், மாணவர்கள் கேட்ட கேள்விக்கு உடனுக்குடன் பதில் அளித்து அசத்தியது. பள்ளி பாடத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளையும் கேட்டனர். அதற்கெல்லாம் சளைக்காமல் பதில் அளித்தது. ஐரிஸ் மூன்று மொழிகளை கையாளும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.