ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்.. அடித்துச் சொல்லும் 5 கேரண்டி.. | Jammu and Kashmir

Update: 2024-09-11 16:42 GMT

ஜம்மு கஷ்மீரில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்பது உள்பட 5 கேரண்டிகளை காங்கிரஸ் வெளியிட்டது

ஜம்மு காஷ்மீர் சடப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த்நாக் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின்5 கேரண்டிகளை வெளியிட்டார். குடும்ப தலைவிகளுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். பொது விநியோக திட்டத்தில் ஒரு நபருக்கு 11 கிலோ தானியங்கள் வழங்கும் நடைமுறை மீட்டெடுக்கப்படும், பெண்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரையில் வட்டி இல்லா கடன் வழங்கப்படும். மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்களுக்கு வழங்கப்பட்ட மறு குடியேற்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும், அனைத்து குடும்பங்களுக்கும் 25 லட்சம் ரூபாய் சுகாதார காப்பீடு வழங்கப்படும் என கார்கே தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்