இந்தியாவின் மொழிகள், கலாச்சாரத்தை காப்பாற்றி, நாட்டை வளமாக மாற்றியவர் பிரதமர் மோடி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மைசூருரு சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா, நஞ்சன்கூடு தாலுகாவில் உள்ள சுத்தூர் மடத்தின் திருவிழாவில் கலந்து கொண்டார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, யோகா, ஆயுர்வேதம், மொழிகளை பாதுகாப்பதை ஊக்குவித்து நாட்டை பாதுகாப்பாகவும், வளமாகவும் பிரதமர் மோடி மாற்றியிருப்பதாக கூறினார். அயோத்தி ராமர் கோவில், காசியில் காசி விஸ்வநாதர் கோவில், கேதர்நாத், பத்ரிநாத் கோவில்கள் உள்ளிட்ட முக்கிய புனித யாத்திரை தலங்களை மேம்படுத்த மோடி உழைத்துள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்தார். நிகழ்ச்சியில், அயோத்தி ராமர் சிலையை செதுக்கிய சிற்பி அருண் யோகிராஜுக்கு, அமித்ஷா மாலை அணிவித்து கவுரவப்படுத்தினார்.