உயிரை விடும் முன் எழுதி வைத்த லெட்டர்... கர்நாடகாவில் வெடிக்கும் போராட்டம்
உயிரை விடும் முன் எழுதி வைத்த லெட்டர்... கர்நாடகாவில் வெடிக்கும் போராட்டம்
கர்நாடக அரசின் மகரிஷி வால்மீகி பட்டியல் பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தில் ஊழல் செய்ததாகக் கூறி மாநில அரசுக்கு எதிராக பாஜக எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள் பெங்களூரில் போராட்டத்தில் குதித்தனர்... எஸ்சி மற்றும் எஸ்டி மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்காக இது கொண்டுவரப்பட்ட நிலையில், அதன் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், மாநகராட்சி ஊழல் மற்றும் அமைச்சரின் தலையீடு குறித்து கடிதம் எழுதி வைத்து விட்டுத் தற்கொலை செய்து கொண்டார்... இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு பட்டியல் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பி.நாகேந்திரன் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்து காவல்துறை வாகனத்தில் போலீசார் ஏற்றிய நிலையில் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.