அதே 2 மணி.. அலறல் சத்தம்.. கொல்கத்தா சம்பவத்தை தொடர்ந்து அடுத்த பயங்கரம் - நடுங்கும் ஈரக்குலை

Update: 2024-08-22 15:54 GMT

சிக்கபல்புரா மாவட்டத்தின் சிந்தாமணியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 65 வயது மூதாட்டி சிகிச்சைக்காக வந்துள்ளார். சிகிச்சை முடிய தாமதமானதால், அவர் வீட்டிற்கு செல்லாமல் மருத்துவமனையிலேயே தங்க முடிவு செய்தார்.

அங்குள்ள ஆக்சிஜன் ஆலைக்கு அருகில் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 2 மணியளவில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். சத்தம் கேட்டு மருத்துவமனையில் இருந்த சிலர் கூடி, அவரை மீட்டனர். குற்றவாளியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், மூதாட்டியை பலாத்காரம் செய்தவர் சிந்தாமணியைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் என்றும், அவருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தது தெரிய வந்தது. அவர் தினக்கூலியாக வேலை செய்பவர் என்றும் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்