மருத்துவமனையில் அடுத்தடுத்து 3 பெண்கள் உயிரிழப்பு... கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-02-28 14:32 GMT

அங்குள்ள பாவகடா அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 22ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொண்ட 7 பெண்களில், 3 பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி விசாரணை மேற்கொண்ட போது, அறுவை சிகிச்சை காரணமாக ஏற்பட்ட நோய் தொற்றால் 3 பெண்களும் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பாவகடா அரசு மருத்துவமனை மருத்துவரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்