கர்நாடகா மாநிலம் ஆனெக்கல் தாலுகாவில், இருசக்கர வாகனம் ஒன்று திடீரென பற்றி எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரு டூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில், எலக்ட்ரானிக் சிட்டி அருகே இந்த விபத்து நேர்ந்துள்ளது. வண்டியின் என்ஜினில் இருந்து, புகை வரும் போதே, வாகனஓட்டி வண்டியை விட்டு இறங்கியதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.