10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பக்கத்து வீட்டால் வந்த வினை.. பள்ளியில் சிறுமி எடுத்த விபரீத முடிவு
கன்னியாகுமரி அருகே பள்ளியில் இருந்த சிறுமி, பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சுங்கான்கடை பகுதியை சேர்ந்த கண்ணன் - சரிதா தம்பதியின் மகள், பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். திடீரென பள்ளியில் இருந்தபோது, சிறுமி மறைத்து வைத்திருந்த பிளேடால், கழுத்து மற்றும் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள், தனது குடும்பத்தாரை தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தியதால், மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாக சிறுமி கூறியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.