டி.ஜி.பி.,உள்துறை செயலாளருக்குக்கு சம்மன்- அதிர வைத்த ஜார்கண்ட் ஆளுநர்

Update: 2024-01-31 02:05 GMT

நில மோசடி வழக்குடன் தொடர்புள்ள சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்த வழக்கில், டெல்லியில் உள்ள ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இல்லத்தில் இருந்து 36 லட்சம் ரூபாயை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. மேலும், 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஹேமந்த் சோரனை தொடர்பு கொள்ள முடியவில்லை என அமலாக்கத்துறை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ஜார்கண்ட் மாநில தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. மற்றும் உள்துறை செயலாளருக்கு, ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் சம்மன் அனுப்பியுள்ளார். இதனிடையே, முதல்வர் ஹேமந்த் சோரன் தனது இல்லம் திரும்பிய நிலையில், அவர் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்