ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள யூனியன் பிரதேச அந்தஸ்து நிரந்தரமானது அல்ல என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு விசாரித்து வருகிறது. 12-ஆவது நாள் விசாரணையின்போது தலைமை நீதிபதி, ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஏதேனும் திட்டம் உள்ளதா, அதற்கான கால வரம்பு ஏதேனும் உள்ளதா கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள யூனியன் பிரதேச அந்தஸ்து நிரந்தரமானது அல்ல என்றும், மீண்டும் மாநில அந்தஸ்து எப்போது வழங்கப்படும் என்ற கால வரையறை உயர்நிலை ஆலோசனைக்கு பிறகு வரும் 31-ஆம் தேதி தெரிவிக்கப்படும் என்றும் கூறினார். லடாக் யூனியன் பிரதேசமாகவே தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.