நாட்டையே அதிரவிட்ட விபத்து.. டெல்லி வருமான வரித்துறை ஆபிஸில் ஒருவர் மரணம்

Update: 2024-05-15 04:54 GMT

ஐடிஒ பகுதியில் அமைந்துள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில், நான்காவது மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பெண் ஊழியர்கள் கட்டிடத்தில் ஜன்னல் வழியாக, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் ஏணிகளை வைத்து கீழே இறங்கி உயிர்த் தப்பினர். 21 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில், அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த 46 வயது மிக்க ஆண் பணியாளர் உயிரிழந்தார். தீ விபத்து நடந்த வருமானவரித்துறை அலுவலகத்தில், தடயவியல் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்