ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கிய மிக பிரபல IT நிறுவனம்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனம், ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் விப்ரோ நிறுவனத்தின் மார்ஜின் அளவு 16 சதவீதம் குறைந்துள்ளதாகவும், போட்டி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் நிறுவனங்களை விட குறைவானது என்றும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வர்த்தக சரிவை சீர்செய்யும் நடவடிக்கையாக, நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை விப்ரோ நிறுவனம் பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.