ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு விடுதலையான முருகன், ஆதார் அட்டை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றார். சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு வந்த போது, ஆதார் அட்டை வழங்குவது மாவட்ட ஆட்சியர் தான் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக முருகன் தர்ப்பு கூறியதால், மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நேரத்தில், இலங்கைக்கு திருப்பி அனுப்ப உத்தரவிடக் கோரி சாந்தன் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டனர். இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணயை பிப்ரவரி 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்