மேட்ச் ரிசல்ட்டையே தலைகீழாக மாற்றிய சூர்யகுமாரின் மாஸ்டர் கேப்டன்சி.. ஒயிட்வாஷான இலங்கை
இலங்கைக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை ஒயிட் வாஷ் செய்து இந்திய அணி அசத்தி உள்ளது.
20 ஓவர்களில் இந்திய அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணியின் பேட்டர்கள் நிதானமாக ரன்களை குவித்தும், சூர்யகுமார் யாதவ்வின் அசத்தலான கேப்டன்சியால், போட்டி டிரா ஆனது. இதையடுத்து நடந்த சூப்பர் ஓவரில் இலங்கை அணி இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், முதல் பந்திலேயே கேப்டன் சூர்யகுமார் பவுன்டரி விளாசி வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம், மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.