இந்தியா- இலங்கை எடுத்த முடிவு... உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

Update: 2024-04-02 04:06 GMT

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, மீனவர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்தியா - இலங்கை மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கூட்டு நடவடிக்கை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த குழு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடி பேசுவதென முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் கடந்த கூட்டம் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை தரப்பில் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டு பிரச்னை காரணமாக கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்ட கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாகவும், இரு தரப்புக்கும் ஏற்ற தேதியில் அடுத்த கூட்டம் விரைவில் நடைபெறும் எனவும் மத்திய அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, வழக்கின் விசாரணையை, தலைமை நீதிபதி அமர்வு, ஜூன் 11ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்