அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்றும்... இங்கெல்லாம் சூறாவளி நிச்சயம்
- மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது...
- அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, 18ம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையை மோங்க்லா - கேப்புபாராவிற்கு இடையே கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அடுத்த 48 மணி நேரத்திற்கு குமரி, நெல்லை, தென்காசியில் கனமழையும்,
- நாளை தூத்துக்குடி, விருதுநகரில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது..
- சென்னை மற்றும் புறநகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
- தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், வடமேற்கு-வடகிழக்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் பகுதிகள்,
- ஒடிசா கடலோரம், மேற்கு வங்க மற்றும் அதை ஒட்டிய வங்கதேச கடலோரம், இலங்கை கடலோரப்பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரம் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்..